கோவையில் மோசமான வானிலை; 30 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

1


சென்னை: சென்னையை போன்று கோவையிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.


கோவையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. மோசமான வானிலையால் மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் கோவை வந்த ஏர் இந்தியா விமானம், 30 நிமிடம் வானில் வட்டமடித்த பின் தரையிறக்கப்பட்டது. டில்லியில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறக்க முடியாமல் கொச்சி விமானநிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையிலும் கடும் பனி மூட்டம் காரணமாக சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள், விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

Advertisement