5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

4

புதுடில்லி: 5 ஆண்டுகளுக்கு பிறகு, ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.


ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:


வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான ரெப்போ ரேட் வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைந்துள்ளது. 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.



டிஜிட்டல் வங்கி சேவைகளில் பாதுகாப்பை மேம்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்ற பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement