திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பேர் கைது
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849129.jpg?width=1000&height=625)
திருச்சி: திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி தாளாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் சுதா மற்றும் அவரது கணவர் வசந்தகுமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பள்ளி முதல்வர் விஜயலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மாணவியின் உறவினர்கள், பள்ளிக்கு சென்று, அலுவல அறையை சேதப்படுத்தினர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பெண்கள், குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் எந்த விதமான அச்சமும் இன்றி அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது; இது கடும் கண்டனத்திற்குரியது.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே, பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வரும் இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் நீங்கள் இருப்பது ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல உள்ளது. ஒரு 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, படிக்கும் பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு ஒரு ஆட்சியை நடத்துகிறீர்கள். உங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் மாவட்டத்தில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடுமைக்கு என்ன பதில் வைத்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி?
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டும்தான் இக்குற்றச்சாட்டில் தொடர்பு உள்ளவர்களா ? மற்றும் வேறு பலர் உள்ளார்களா என முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ள அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![raja raja](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![nisar ahmad nisar ahmad](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவித் திட்டம்: தமிழகத்தில் எத்தனை பயனாளிகள்?
-
பழநி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள்
-
எம்.எல்.ஏ.,க்களை வாங்க முயற்சியா: விசாரிக்க சென்ற போலீசாரை அனுமதிக்க கெஜ்ரிவால் மறுப்பு
-
கவர்னரும், ஆட்சியாளர்களும் கணவன், மனைவி போல இருக்க வேண்டும்; பிரேமலதா யோசனை
-
மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? தேர்தல் கமிஷனுக்கு ராகுல் கேள்வி
-
காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் 7 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி