யானை தாக்கியதில் இருவர் காயம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849120.jpg?width=1000&height=625)
பந்தலூர்: நீலகிரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் இருவர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் இன்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் 65 வயதான கணேசன், 60 வயதுடைய காந்திமதி, ஆகிய இருவரும் இன்று காலை வீட்டிற்கு அருகே உள்ள வனத்தை ஒட்டிய தோட்டத்தில், விறகு சேகரிக்க சென்றுள்ளனர்.
அப்போது புதரில் இருந்த ஒற்றை யானை இவர்களை தாக்கியது. இது குறித்து தகவல் அறிந்த பந்தலூர் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான அதிகாரிகள், வனக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காயங்களுடன் நடந்து வந்த காந்திமதியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதருக்குள் கிடந்த கணேசனை வருவாய் துறையினர் மீட்டு வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக இருவரையும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
. கடந்த சில வாரங்களில் யானை தாக்கியதில், இதுவரை ஏழு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
சமூக விரோதிகளுக்கு போலீசார் மீது பயமில்லை; அண்ணாமலை
-
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வித்தகுதி ரத்து!
-
அலாஸ்காவில் அமெரிக்க விமானம் மாயம்; 10 பேரின் கதி?
-
தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை; சென்னை ஐகோர்ட் கண்டிப்பு
-
திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பேர் கைது
-
செல்வப்பெருந்தகை வெற்று அறிவிப்பு; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'