உ.பி., மஹா கும்பமேளாவில் 3வது முறையாக தீவிபத்து
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849121.jpg?width=1000&height=625)
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் மஹா கும்பமேளாவில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா நிகழ்ச்சி பிப்.26ம் தேதி நிறைவு பெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். சில நாட்கள் முன்பு கும்பமேளாவின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 18 கூடாரங்கள் எரிந்து சேதம் அடைந்தன. எந்த உயிர்ச்சேதமும் நிகழவில்லை. தொடர்ந்து, ஜன.,25ம் தேதி மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 2 வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இந்த நிலையில், மஹா கும்பநகரின் பழைய ஜி.டி., சாலையில் உள்ள துளசி சவுரஹாவில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
அலாஸ்காவில் அமெரிக்க விமானம் மாயம்; 10 பேரின் கதி?
-
தாலிக்கொடியை பறிமுதல் செய்த சுங்கத்துறை; சென்னை ஐகோர்ட் கண்டிப்பு
-
திருச்சியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பேர் கைது
-
செல்வப்பெருந்தகை வெற்று அறிவிப்பு; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'
-
ரத்தன் டாடா சொத்தில் மோகினிமோகன் தத்தாவுக்கு ரூ.500 கோடி பங்கு... யார் இவர் தெரியுமா?
-
எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?