எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கப்படும்: ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் பதில்

6


புதுடில்லி: அரசியல் கட்சிகளை முக்கியமான பங்குதாரர்களாக கருதுவதாகவும், அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்படும் எனவும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.



டில்லியில் நிருபர்களைச் சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மஹாராஷ்டிராவில் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? லோக்சபா தேர்தலுக்கு பிறகு 39 லட்சம் வாக்காளர்கள் ஏன் சேர்க்கப்பட்டனர்? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தார்.


இதற்கு பதிலளித்து தேர்தல் கமிஷன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது; வாக்காளர்கள் மீது முதன்மையான கவனம் செலுத்தும் நேரத்தில், அரசியல் கட்சிகளை முக்கியமான பங்குதாரர்களாக தேர்தல் கமிஷன் கருதுகிறது. கட்சிகளின் கருத்துகள், கேள்விகளை மற்றும் பரிந்துரைகளை நாங்கள் மதிக்கிறோம். நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முழுமையான உண்மையை எழுத்துப்பூர்வமாக பதிலாக அளிப்போம். இவ்வாறு அந்த பதிவில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Advertisement