தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்; ராமதாஸ் வேதனை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849157.jpg?width=1000&height=625)
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது நல்லதல்ல என்று பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; கோவையில் இருந்து திருப்பதி சென்ற ரயிலில் பயணம் செய்த கருவுற்ற பெண்ணுக்கு மனித மிருகம் ஒன்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை அந்தப் பெண் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்த மிருகம், அப்பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.
அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியின் அறங்காவலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுவதும் செய்தியும் வேதனையளிக்கிறது. பள்ளியாக இருந்தாலும், ரயிலாக இருந்தாலும் பெண்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் மாணவி ஒருவர் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, சென்னை கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சியும், வேதனையும் விலகுவதற்கு முன்பாகவே இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது நல்லதல்ல.
தமிழகத்தில் எத்தகைய குற்றங்களைச் செய்தாலும் அதிலிருந்து எளிதாக தப்பி விடலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம் ஆகும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும்; அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது. பஸ் ஸ்டாண்டுகள், ரயில்கள் ஆகியவற்றில் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
![முருகன் முருகன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Smbs Smbs](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
இந்தியாவை எதிர்மறையாக சித்தரிப்பதா: வங்கதேசத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
-
மகன் திருமணத்தால் மகிழ்ச்சி: ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்கும் அதானி
-
அரையிறுதியில் மாயா ரேவதி: மும்பை ஓபனில் முன்னேற்றம்
-
பைனலில் ராம்குமார்-மைனேனி: சென்னை ஓபனில் அபாரம்
-
ஸ்மித், கேரி சதம் விளாசல்: ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு
-
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! அல்வா சாப்பிடும் முதல்வர்! சீமான் விளாசல்