தகவல் சுரங்கம் : கண்டம் தாண்டிய பஸ்

தகவல் சுரங்கம்


கண்டம் தாண்டிய பஸ்

இந்தியாவின் கோல்கட்டாவில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு பஸ் சேவை, 1957 - 1976 வரை இயக்கப்பட்டது. இது உலகில் நீண்டதுாரம் பயணித்த பஸ் என கருதப்படுகிறது. இது லண்டனில் இருந்து பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை கடந்து டில்லி, ஆக்ரா, பிராயாக்ராஜ், வாரணாசி வழியாக கோல்கட்டாவை வந்தடையும். பயண துாரம் 16 ஆயிரம் கி.மீ. பயண காலம்
50 நாட்கள். உணவு, தங்கும் வசதி சேர்த்து இதற்கான அப்போதைய பயணக்கட்டணம்
ரூ. 9300 என இருந்தது.

Advertisement