ஓட்டு சதவீதத்தை வெளியிட மறுக்கும் தேர்தல் கமிஷன்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

4


புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டு சதவீதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட மறுக்கிறது என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல முறை கோரிக்கை விடுத்தும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பதிவான ஓட்டு விவரங்கள் மற்றும் பார்ம் 17 சி ஆகியவற்றை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை. எனவே ஆம் ஆத்மி புதிய இணையதளத்தை உருவாக்கி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் அனைத்து விவரங்களையும் வெளியிட்டு உள்ளோம். அதில் ஓட்டுச்சாவடியில் பதிவான ஓட்டுகள் உள்ளன.


வெளிப்படைத்தன்மை கருதி தேர்தல் கமிஷன் இதனை செய்திருக்க வேண்டும். ஆனால்,துரதிர்ஷ்டவசமாக இதனை செய்ய தேர்தல் கமிஷன் மறுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பார்ம் 17 சியில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் எவ்வளவு ஓட்டுகள் பதிவாகியது என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

Advertisement