நெடுஞ்சாலை தடுப்புகளில் பாதுகாப்பு நடவடிக்கை இல்லாததால் --தொடரும் விபத்து

ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையின் சாலை தடுப்புகளில் பல மாதங்களாக சோலார் விளக்குகள், பிரதிபலிப்பான்கள் அமைக்காததால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வளைவுகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தவிர்க்க சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டது.

கடம்பன் குளம் கண்மாய் இரட்டை பாலம் முதல் அரசு பொது மருத்துவமனை வரை, தளவாய்புரம் விலக்கு, சேத்துார் பெருமாள் கோயில் அபாய வளைவு உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இவற்றில் ஒளிரும் சோலார் விளக்குகள், இரண்டு பக்கமும் எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பான்கள் என பல்வேறு இடங்களிலும் தொடக்கத்தில் செயல்முறைக்கு வந்தது.

இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாமல் விளக்குகள் எரியாததுடன் சாலை தடுப்புகளில் வாகனங்கள் மோதி அறிவிப்பு பலகைகளும் சேதமாகின.

தளவாய்புரம் விலக்கில் மீண்டும் சரி செய்யாமல் வைத்துள்ளனர்.

கடம்பன் குளம் கண்மாய் திருப்பத்தில் ரோட்டோரங்களில் மண் குவியல் சேர்ந்து ஒதுங்க முடியாமல் உள்ளது.

சேத்துார் பெருமாள் கோயில் திருப்பத்தில் சோலார் விளக்கு பழுது தடுப்புகளும் சேதமடைந்து விபத்து ஏற்படுத்தி வருகிறது.

தகுந்த இடங்களில் சோலார் விளக்குகள் எரிவது, ரிப்லெக்டர்களை அமைத்து தடுப்பு சேதத்தை சரி செய்வது போன்ற பாதுகாப்பு அம்சங்களை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

Advertisement