தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849939.jpg?width=1000&height=625)
புதுச்சேரி : ''வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர் காங்., போட்டியிடும்'' என, அக்கட்சி தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி தெரிவித்தார்.
காங்., கட்சியில் இருந்து வெளியேறிய முதல்வர் ரங்கசாமி, 2011 பிப்ரவரி 7ம் தேதி, என்.ஆர்.காங்., என்ற கட்சியை துவக்கினார். தற்போது, புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த என்.ஆர்.காங்., கட்சியின் 15வது ஆண்டு விழாவில், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டியிடும் என அக்கட்சி தலைவர் ரங்கசாமி அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'என்.ஆர்.காங்., தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்து கோரிக்கை வருகிறது. தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்., போட்டியிடும். காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாகக் கொண்டு செயல்படுவோம்' என்றார்.
த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டியிட ரங்கசாமி திட்டம் வகுப்பதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும்
-
டில்லியில் ஜெட் வேகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை: வீழ்ந்தது கெஜ்ரிவால் ராஜ்ஜியம்!
-
ஈரோடு இடைத்தேர்தல்; 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., முன்னிலை
-
டில்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ., முன்னிலை
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு