சேதமடைந்த நிலையில் ஓடும் அரசு பஸ் : பயணிகள் அவதி
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் பஸ் போக்குவரத்து கழகத்தில் இயக்கக்கூடிய அரசு டவுன் பஸ் பெரும்பாலும் சேதமடைந்த நிலையில் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
உத்தரகோசமங்கை அருகே மோர்க்குளம் கீழக்கரை செல்லும் பஸ்கள் வெள்ளா, மாலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படும் 1 ஏ, 14, 6 பி உள்ளிட்ட வழித்தட பஸ்கள் சேதமடைந்த நிலையில் இயக்கப்படுகிறது.
பயணிகள் கூறியதாவது: தற்போது நிலவும் பனி மற்றும் மழையில் அதிகளவு பயணிகள் சிரமப்படுகின்றனர். அந்த அளவிற்கு பஸ்சில் கூரை பூச்சு ஒழுகும் நிலையில் உள்ளது.
பல படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த ரோட்டில் பயணிக்கும் போது இடிபாடுகளுடன் செல்லும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பழைய பஸ்களை முறையாக பழுது நீக்கி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement