3 கி.மீ., நடந்தே சென்று பொருள் வாங்கும் அவலம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராம மக்கள் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 3 கி.மீ., நடந்து செல்லும் அவலநிலை உள்ளது.

முதுகுளத்துார் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ரேஷன் கடை வசதி இல்லாததால் ரேஷன் கார்டுதாரர்கள் 3 கி.மீ., பொதிகுளம் கிராமத்திற்கு கண்மாய் வழியாக நடந்து சென்று அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

ரேஷன் பொருட்கள் வாங்கும் நாட்களில் அத்தியாவசிய வேலைக்கும், விவசாய பணிக்கும் செல்ல முடியவில்லை. இலவச பொருட்களை வாங்குவதற்கு பணம் செலவு செய்யும் நிலை உள்ளது. சரக்கு வாகனங்களில் 6 கி.மீ., சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

கூவர்கூட்டம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement