மூடுபனியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் தொடரும் மூடு பனியால் மிளகாய் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், பரமக்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. செப்.,கடைசி வாரத்தில் விதைப்பு செய்யப்பட்ட மிளகாய் செடிகள் தற்போது பூக்கள் பூத்து மகசூல் கொடுக்கும் நிலையை எட்டி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மிளகாய் செடிகளில் பூக்கள் பிஞ்சுகளாக மாறாமல் வெம்பி உதிர்கின்றன. இதனால் மிளகாய் செடிகளில் காய்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்த நிலையில் மகசூல் கொடுக்கும் நேரத்தில் கடும் பனிமூட்டத்தால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement