வக்கீலை தாக்கியவர் கைது

காரைக்குடி: காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சேர்ந்தவர் விமல் 44. இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமான நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

இந்த வழக்குகளை, காரைக்குடி அழகப்பாபுரத்தைச் சேர்ந்த பெண் வக்கீல் அமலாவிஜி 40, நடத்தி வந்தார். வழக்கை இழுபறி செய்வதாக விமலுக்கும் அமலாவிஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வழக்கை, நடத்த முடியாது என்று அமலாவிஜி சேஞ்ச் ஆப் வக்காலத்து கொடுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த விமல், பெண் வக்கீல் அமலாவிஜியை மிரட்டி கோர்ட் வளாகத்தில் வைத்து தாக்கி மிரட்டி உள்ளார். அமலாவிஜி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் விமலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement