அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை கட்டாயம்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பணி நேரத்தில் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என 2021ல் அரசாணை 363ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் யாரும் அணிவதில்லை.
இதனால் அரசு அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அதிகாரிகள் யார், ஊழியர்கள் யார் என தெரியாமல் புரோக்கர்களின் பிடியில் சிக்கி பணத்தை இழப்பதுடன் அவர்களின் கோரிக்கையும் நிறைவேறாமல் தவிக்கின்றனர்.
இதனை தவிர்க்க அனைத்து அரசு ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என கோரி கீழபுதுக்கோட்டை சமூக ஆர்வலர் லோகநாதன் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித்திடம் புகார் மனு கொடுத்தார்.
கலெக்டர் ஆஷாஅஜித் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 90 அரசு துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய வேண்டும், இதனை உறுதி செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்