குப்பைமேடு தோட்டமாகிறது
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849615.jpg?width=1000&height=625)
தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனை பின்புறம் நகராட்சி 16 வது தொகுதி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100 மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி அருகே வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையை துப்புரவு பணியாளர்களே கொட்டி வந்தனர்.
குப்பை தேங்கி அந்த பக்கமே செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசியது. இது குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது.
நகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு குப்பைகளை கொட்டக்கூடாது என உத்தரவிட்டு போர்டும் வைத்தனர்.
அந்த இடத்தில் நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டனர். சில செடிகளை நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். குப்பைமேடு தோட்டமாக மாற உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
-
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி: ரங்கசாமி அறிவிப்பு
-
எம்.ஜி.ஆர்., - ஜெ., விசுவாசிகளை 'கவனிக்க' பழனிசாமி அறிவுறுத்தல்
-
பிப்.,12ல் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்; அதிபர் டிரம்பை சந்திக்க திட்டம்
Advertisement
Advertisement