முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!

3

சென்னை: ஈரோட்டில், மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 1.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, முயல் ரத்தம் கலந்த, 7 ஹேர் ஆயில் பாட்டில்களை மருந்து ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.



ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கடைகளில் முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் விற்பனை செய்வதாக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.


சோதனை முடிவில், மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 1.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, முயல் ரத்தம் கலந்த, 7 ஹேர் ஆயில் பாட்டில்களை மருந்து ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர். அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்ய, கடைகளுக்கு உரிமம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த கடைகளில் எண்ணெய் இருப்பு வைத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். ஆனால் அவற்றை விற்க உரிமம் இல்லை. ஹேர் ஆயில் ஒரு அழகுசாதனப் பொருள் ஆகும். இது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தில் வருகிறது. ஹேர் ஆயில்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உரிமம் கட்டாயம்.


பறிமுதல் செய்யப்பட்ட முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயிலை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம்.
ஆய்வக அறிக்கையின் அடிப்படையில்,நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Advertisement