பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய இது நடக்கணும்: சொல்கிறார் இ.பி.எஸ்.,
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852889.jpg?width=1000&height=625)
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
சிறுமி முதல் மூதாட்டி வரை, பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதும், அரசுப்பள்ளி முதல் ஓடும் ரயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதும் வேதனைக்குரியது.
யார் அந்த SIR என்ற கேள்விக்கு இன்று வரை, இதுவரை பதில் இல்லை. யார் அந்த SIRகள் என்று கேட்டால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட, குற்றவாளிகளின் பாட்டன் வம்சத்தில் இருப்பவர்கள் யாராவது தொலைதூரத்தில் அ.தி.மு.க.,வுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று புலனாய்வு மேற்கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு.
இந்த விடியா தி.மு.க., ஆட்சியாளர்களா பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை. எனவே தான், பெண்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை தொடர்ந்து அ.தி.மு.க., மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசு வீழ்ந்து, அ.தி.மு.க.,வின் நல்லாட்சி அமைவது தான். போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான போராட்டம் தொடரும்! வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![M Ramachandran M Ramachandran](https://img.dinamalar.com/data/uphoto/229077_155625823.jpg)
![Ramesh Sargam Ramesh Sargam](https://img.dinamalar.com/data/uphoto/17689_225108121.jpg)
மேலும்
-
பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை கோரி மனு; தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: முன்னாள் காங்., எம்.பி., குற்றவாளி
-
செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கூட்டறிக்கை; 58 நாடுகள் கையெழுத்து
-
அதெல்லாம் அன்றோடு முடிந்தது; ஆள விடுங்க; நழுவினார் செங்கோட்டையன்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அடிக்கடி மாற்றக்கூடாது: ராமதாஸ்
-
எதற்கு தேர்தல் வியூக நிபுணர்கள்: கேட்கிறார் சீமான்