காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

2

ராமநாதபுரம்: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.


இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு காரில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நிறுத்தியபோது காரில் இருந்தவர்கள் காரை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.


இதையடுத்து காரை சோதனை செய்தபோது காரில் 250 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தப்பி ஓடிவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement