புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853744.jpg?width=1000&height=625)
புதுடில்லி: புதிய வருமான வரி சட்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் 1961ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதாவது 60 ஆண்டுக்கும் மேல் ஆகி உள்ளது. இதில் பல ஆண்டுகளாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி இன்று (பிப்.,13) லோக்சபாவில் புதிய வருமான வரி மசோதாவை (2025) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், 'சிக்கலின்றி வருமான வரியை தாக்கல் செய்ய புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும். புதிய மசோதாவில் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன' என்றார். இந்த மசோதா ஆய்வுக்காக பார்லி நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளது.
சிறப்பம்சங்கள் இதோ!
* மொழி எளிமைப்படுத்தல் காரணமாக சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்துகொள்ள உதவும். இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைக்கும். வரி செலுத்துவோருக்கு நம்பிக்கை அளிக்கும்.
* படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள நீளமான சொற்களுக்கு பதில் சிறிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.
* புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்கள் இருக்கிறது.
* வருமான வரிச் சட்டம் 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போது, 880 பக்கங்கள் கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமம் சிறப்பு ரயில்: கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் கவர்னர் ரவி
-
சென்னையில் போதையில் அரசு பஸ்சை கடத்தியவர் கைது
-
பெங்களூரு மெட்ரோ கட்டணம் 30 சதவீதம் குறைப்பு
-
நடிகை கங்கனா ரணாவத் துவங்கும் உணவகம் : நாளை (பிப்.14) திறப்பு
-
15 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் வாழ்ந்த பறவை புதைபடிவம் சீனாவில் கண்டுபிடிப்பு
-
தே.ஜ., கூட்டணி 400 இடம் பெறும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை