ஆசிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்

கிங்டாவோ: ஆசிய பாட்மின்டன் லீக் போட்டியில் ஏமாற்றிய இந்தியா 2-3 என, தென் கொரியாவிடம் வீழ்ந்தது.

சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. 'டி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் மக்காவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

நேற்று தனது இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், தென் கொரியாவின் சோ ஜியோனியோப் மோதினர். இதில் சதிஷ் குமார் 17-21, 21-18, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி 19-21, 21-16, 21-11 என தென் கொரியாவின் கிம் மின் ஜி, கிம் யு ஜங் ஜோடியை வென்றது.

பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் மாளவிகா 9-21, 10-21 என தென் கொரியாவின் சிம் யு ஜின்னிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜுன், சாத்விக்சாய்ராஜ் ஜோடி 14-21, 23-25 என தென் கொரியாவின் ஜின் யங், சங் செயுங் ஜோடியிடம் வீழ்ந்தது. கலப்பு இரட்டையரில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா 21-11, 12-21, 15-21 என தென் கொரியாவின் நா ஜியோங், கி டாங் ஜு ஜோடியிடம் தோற்றது. முடிவில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.


காலிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

Advertisement