தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்:த.வெ.க., வெளியிட்ட திடீர் அறிவிப்பு

சென்னை:த.வெ.க., தலைவரான நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் வர இருக்கிறார் என்று, அந்த கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
த.வெ.க., கட்சி தலைவரான நடிகர் விஜய், கட்சி தொடங்கியதில் இருந்து வெளியில் வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு.
கட்சி மாநாடு, அம்பேத்கர் புத்தக வெளியீடு, பரந்துார் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை சந்திக்கச்சென்றது என மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே அவர் வெளியில் வந்து கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்.
இதனால், 'வீட்டை விட்டும், அலுவலகத்தை விட்டும் எங்கும் செல்லாமல் அறிக்கை அரசியல் செய்கிறார். ஒர்க் பிரம் ஹோம் அரசியல்வாதி' என்ற விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
அவரும் அதற்கு தகுந்தபடி, வெள்ள நிவாரணம் வழங்குவதை கூட, பாதிக்கப்பட்டவர்களை தன் இடம் வரவழைத்து வழங்கினார் விஜய்.
அவர் எப்போது வெளியில் வந்து மக்களை சந்திப்பார், பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்ற கேள்வி, அனைவருக்கும் இருக்கிறது.
அதற்கு பதில் அளிக்கும் வகையில், அவரது கட்சி பொருளாளர் வெங்கட்ராமன், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ''உங்களைப்பார்க்க, உங்கள் இடம் தேடி தலைவர் விஜய் வரப்போகிறார். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் வரப்போகிறார். மக்களோடு மக்களாக, அனைத்து இடங்களுக்கும் வரப்போகிறார்,'' என்றார்.இதன் மூலம், கட்சியை பிரபலப்படுத்த விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டம் வைத்திருப்பது உறுதியாகியுள்ளது.










மேலும்
-
மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு; ஒருதலை காதலா என விசாரணை
-
கட்சிக்கு இது களையுதிர் காலம்; சீமான்
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
லோகோ பைலட்டுகள் இளநீர், இருமல் மருந்து சாப்பிட தடை; உத்தரவை வாபஸ் வாங்கிய ரயில்வே நிர்வாகம்!
-
சென்னையில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; போலீசார் அதிரடி
-
போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார்; முதல் முறையாக அறிவித்த டாக்டர்கள்