பேச்சு, பேட்டி, அறிக்கை

1

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:



மத்திய அரசை, தமிழக முதல்வர் அரசியல் ரீதியாக எதிர்த்து போராடி வரும் சூழலில், மத்திய அரசு அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல், மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை குறைத்தால், நெருக்கடி ஏற்படும் என்ற நிலையை உருவாக்கி வருகிறது. இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

இந்த மாதிரி எல்லாம் காரணம் கண்டுபிடிக்க, ரூம் போட்டு யோசனை பண்ணியிருப்பாரோ?

தமிழக பா.ஜ.,வில் இருக்கும் நடிகர் சரத்குமார் அறிக்கை:



புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி திட்டம், எந்த இடத்திலும் ஹிந்தி கட்டாயம் என, குறிப்பிட்டு திணிக்கவில்லை. தாய்மொழியை முதன்மைப்படுத்தியும், ஆங்கிலமும், வேறு எந்தவொரு மாநிலத்தின் பிரதான மொழியையும் விருப்பத் தேர்வாக, தமிழ் மாணவர்கள் கற்கலாம் என்கிறது. மேலும், பிற மாநிலங்களில் மூன்றாவது விருப்ப மொழியாக மாணவர்கள் தமிழை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்குகிறது.

அதெல்லாம் தெரியாது... திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மூன்றாவது மொழின்னா அது ஹிந்தி மட்டும்தான்!





த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை:



சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயதான பெண் போலீஸ் பணி முடிந்து, இரவில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் நிலைய நடைபாதையில் நடந்து சென்றபோது, அவரை ஒருவர் பாலியல் தொந்தரவு செய்து செயினை பறித்துள்ளார். இந்த குற்றச்செயலுக்கு போதைப்பொருள் காரணமாக இருந்துஉள்ளது. சட்டம் - ஒழுங்கை கடுமையாக்கி, போதைப் பொருட்கள் இல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை இந்த நுாற்றாண்டில்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்!



Advertisement