மனித கடலை உருவாக்கிய அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோரை முதல்வர் பாராட்டினார்.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வரவேற்றார்.
முதல்வர் ஸ்டாலின், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசியதாவது:
கடலுாரில் இந்த விழாவை பார்க்கும்போது, பன்னீர்செல்வமும், கணேசனும் மனிதக்கடலை உருவாக்கி உள்ளார்கள்.
கடல் வணிகத்திற்காக ஆங்கிலேயர் கட்டிய டேவிட் கோட்டை, வள்ளலார் வாழ்ந்த மாவட்டம், புது வரலாற்று தொடக்கமாக நீதிக்கட்சியின் சுப்பராயலு ரெட்டியார் வாழ்ந்த மாவட்டம்.
தமிழக வரலாற்றில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பெருமைக்கு சொந்தக்காரர் பன்னீர்செல்வம். நம் திட்டங்களால் மண்ணும் செழித்தது, மக்களும் மகிழ்ந்தார்கள்.
கருணாநிதியால் வேந்தே ஏன அழைக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மகன் வேங்கை மைந்தன். அவரது பெயரை சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கருணாநிதி சூட்டினார்.
கணேசன் தொழிலாளர்களின் பிரச்னையை மட்டுமல்லாமல், இளைஞர்களின் திறனை வளர்த்து வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தார்.
அவரது முயற்சியால் மாவட்டந்தோறும் நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களால் பல லட்சம் இளைஞர்கள் வேலை பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் அதிகாரிகளின் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர் என இம்மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சர்களை முதல்வர் பாராட்டி பேசினார்.
மேலும்
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு