சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார் புரம் தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார் புரத்தில் தீப்பெட்டி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று (பிப்.,22) தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். ரசாயன கலவை தயார் செய்யும் பாய்லர் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். ஆலை உள்ளே சிக்கிய அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Advertisement