டாடா இ.வி., கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை சலுகை
மும்பை,:இரண்டு லட்சம் டாடா மின்சார கார்கள் விற்பனையானதை கொண்டாடும் வகையில், டாடா நிறுவனம், மின்சார கார்களுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் சலுகை அறிவித்துள்ளது.
இதில், டிகார் இ.வி., கார் தவிர, நெக்ஸான் இ.வி., - பஞ்ச் இ.வி., - கர்வ் இ.வி., மற்றும் டியாகோ இ.வி., கார்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இந்த சலுகை, அடுத்த 45 நாட்களுக்கு வழங்கப்படும். பிப்., 1ல் இருந்து மார்ச் 31க்குள் பதிவு செய்யப்பட்ட நெக்ஸான் இ.வி., மற்றும் கர்வ் இ.வி., கார்களுக்கு, ஆறு மாதம் இலவச சார்ஜிங் வழங்கப்படுகிறது.
அதுவும் முதல் 1,000 யூனிட்களுக்கு, டாடா பவர் சார்ஜிங் நிலையங்களில் மட்டும் இலவச சார்ஜிங் வழங்கப்படுகிறது.
பிற சலுகைகள்
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்
கார் பரிமாற்ற சலுகை 50,000 ரூபாய் வரை
அடுத்த ஆறு மாதங்களுக்கு கர்வ் இ.வி., மற்றும் நெக்ஸான் இ.வி., கார்களுக்கு இலவச சார்ஜிங் வசதி (டாடா பவர் சார்ஜிங் நிலையங்கள்)
இலவச 7.2 கி.வாட்., 'ஏசி' சார்ஜர் மற்றும் நிறுவுதல்
முன்பணம் தேவையில்லை, 100 சதவீத நிதி வசதி டாடா வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை
டாடா இ.வி., வாடிக்கையாளர்கள் - புதிய நெக்ஸான் இ.வி., மற்றும் கர்வ் இ.வி., கார்களுக்கு, 50,000 ரூபாய் வரை சலுகை
டாடா இன்ஜின் கார் வாடிக்கையாளர்கள் - புதிய நெக்ஸான் இ.வி., மற்றும் கர்வ் இ.வி., கார்களுக்கு, 20,000 ரூபாய் வரை சலுகை.
மேலும்
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு