விடுதி உணவில் பூச்சி, புழுஇசை மாணவர்கள் மறியல்
விடுதி உணவில் பூச்சி, புழுஇசை மாணவர்கள் மறியல்
தஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லுாரியில், 230 மாணவ - மாணவியர் பல்வேறு இசைப்பிரிவுகளில் படிக்கின்றனர். இங்கு விடுதி வசதி கிடையாது. தனியார் மண்டபம், விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
விடுதியில் வழங்கப்படும் உணவில், பீடித்துண்டு, கரப்பான் பூச்சி, புழுக்கள் இருந்துள்ளன. இதனால், நேற்று காலை, திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி - கும்பகோணம் சாலையில் திரண்ட மாணவர்கள், புதிய விடுதி கட்டித்தரவும், தரமான உணவு வழங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தரவும் வலியுறுத்தி மறியல் செய்தனர்.
திருவையாறு டி.எஸ்.பி., அருள்மொழி அரசு, கல்லுாரி பொறுப்பு முதல்வர் ஸ்ரீ வித்யா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
மேலும்
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு