1,400 கி.மீ., தொலைவு... ஒற்றை ரூபாய் செலவில்லாமல் கும்பமேளாவுக்கு சென்ற இளைஞர்

பிரயாக்ராஜ்: மும்பையில் இருந்து ஒரு ரூபாய் செலவில்லாமல், பொதுமக்களின் உதவியால் இளைஞர் ஒருவர், உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவுக்கு சென்றுள்ளார்.

இன்ஸ்டா பிரபலமாக இருப்பவர் திவ்யா போபனி,22. இவர், ஒரு ரூபாய் செலவில்லாமல், மும்பையில் இருந்து உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் பங்கேற்க திட்டமிட்டார்.


கடந்த பிப்.,12ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட இவர், சாலைகளில் செல்லும் பைக், கார் மற்றும் லாரிகளில் லிப்ட் கேட்டே சென்றுள்ளார்.


மும்பையில் இருந்து நாக்பூர் சென்று, அங்கிருந்து மத்திய பிரதேசத்தின் ஜபால்பூர் சென்றுள்ளார். பிறகு, அங்கிருந்து பிரயாக்ராஜ் சென்றடைந்துள்ளார்.


தன்னுடைய இந்தப் பயணம் குறித்து பேசிய அவர், "பைக், ஸ்கூட்டர், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் லிப்ட் கேட்டு 1,400 கி.மீ., தொலைவை கடந்து வந்துள்ளேன். எனக்கு லிப்ட் கொடுத்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. மக்களின் உதவியால் தான் இந்தப் பயணம் சாத்தியமானது," எனக் கூறினார்.


தனது பயணம் குறித்த வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் போட்டுள்ளனர்.

Advertisement