தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் மத்திய அரசு துரை குற்றச்சாட்டு

மதுரை : ''கவர்னர் மூலமாக இடையூறு அளித்து தமிழக அரசுக்கு அவப்பெயரை மத்திய அரசு ஏற்படுத்துகிறது,'' என, மதுரையில் ம.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் துரை குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது: துணை முதல்வர் உதயநிதிக்கும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அண்ணாமலை கூறுகிறார்.

தமிழகத்தில் பா.ஜ., தவிர அனைத்து கட்சிகளும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

இன்று உலக அளவில் மருத்துவம், வர்த்தகம், தொழில் துறையில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்த ஆங்கில புலமை தான் காரணம். மூன்றாவது மொழியாக ஹிந்தியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். ஆனால் மூன்றாவது மொழியை தேர்ந்து எடுத்தால் ஹிந்தியை தான் தேர்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.

பத்தாண்டுகளாக தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி வரவில்லை. கவர்னர் மூலமாக இடையூறு அளித்து மாநில அரசுக்கு ஒரு அவப்பெயரை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் பாலியல் வன்முறை அதிகம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்டோர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டில்லியில் சட்டம் ஒழுங்கு மோசம். நான் விபத்தாக தான் அரசியலுக்கு வந்தேன். அதில் நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கு ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள். என்னை அரசியலுக்கு இழுத்து வந்தவர்கள் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தான் என்றார்.

Advertisement