ஹச்.கே.யு.5- கோவிட்-2 வைரஸ்: அச்சம் தேவையில்லை!

புதுடில்லி: சீனாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஹச்.கே.யு.5- கோவிட்-2 வைரஸால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வுஹான் நிறுவனத்தில் கோவிட் வைரஸ்கள் குறித்த விரிவான ஆராய்ச்சி மேற்கொண்ட ஷி ஜெங்லி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், ஹச்.கே.யு.5- கோவிட்-2 வைரஸை கண்டுபிடித்துள்ளனர். கோவிட் 19 வைரஸ் போலவே இருப்பதால், இதுவும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முதலில் விஞ்ஞானிகள் சந்தேகித்தனர்.
ஆனால், அப்படி எத்தகைய பாதிப்பையும் இதுவரை இந்த வைரஸ் ஏற்படுத்தவில்லை என்று அதன் தன்மைகளை ஆராய்ந்தபோது தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதித்தால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாச பிரச்சனைகள், சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும்
-
பர்னிச்சர் தொழிற்சாலையில் தீ ரூ.1 கோடி பொருட்கள் நாசம்
-
காங்., ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்ட மொழியானது ஹிந்தி இப்போது அதை படித்தால் தான் தொழில் செய்ய முடிகிறது!
-
. ரூ.25 லட்சம் கடனை திரும்ப கேட்டு டிரைவரை கடத்திய 5 பேர் கும்பல் கைது
-
கடலை எண்ணெய் விலை ரூ.160 ஆக சரிவு இறக்குமதி வரியை உயர்த்த ஆலோசனை
-
தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒன்றிய செயற்குழு கூட்டம்
-
'மாநகராட்சியில் 15 நாட்களுக்குள் துாய்மை பணியை முறைப்படுத்தணும்'