பர்னிச்சர் தொழிற்சாலையில் தீ ரூ.1 கோடி பொருட்கள் நாசம்
ஓசூர்: ஓசூரில், பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மீனாட்சி நகரை சேர்ந்தவர் தன-சேகர், 41. ஓசூரிலுள்ள ஆவலப்பள்ளி சாலையில், பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதில் பணி-யாற்றும், 6 தொழிலாளர்கள் நேற்று மதியம் உணவு சாப்பிட, தொழிற்சாலையை மூடி விட்டு சென்றனர். மதியம், 3:00 மணிக்கு மின்கசிவால் தொழிற்சாலையில் தீப்பிடித்தது.ஓசூர் தீயணைப்புத்துறையினர், இரு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை, 4:30 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் தயாரிக்க வைத்திருந்த பல்-வேறு வகையான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாச-மானதாக தெரிவித்த நல்லுார் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்