'மாநகராட்சியில் 15 நாட்களுக்குள் துாய்மை பணியை முறைப்படுத்தணும்'
நாமக்கல்: 'நாமக்கல் மாநகராட்சியில், 15 நாட்களுக்குள், துாய்மை பணியை முறைப்படுத்த வேண்டும்' என, மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், எஸ்.ஆர்.எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மூலம், துாய்மை பணிகள், 2023 மே முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஆக., முதல் துாய்மை பணியாளர்கள் ஒருசிலர், தவறான வழிகாட்டுதலால், முறையாக பணி செய்ய மறுக்கின்றனர். அதனால், மாநகரில் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு, மாநகராட்சிக்கும், மாமன்றத்-திற்கும் பொது மக்களின் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் சூழ்-நிலை உருவாகி உள்ளது. எனவே, மாநகராட்சி துாய்மை பணிகள் பாதிப்பு அடையாமல் இருக்க, தற்போது பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த டிரைவர்களை நெறிமுறைப்படுத்துவது கட்டாயமாக உள்ளது. தற்போது பணி-யாற்றும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த டிரை-வர்களின் துாய்மை பணியை நெறிமுறைப்படுத்த நிபந்தனை-யுடன் கூடிய புதிய விண்ணப்பம் பெற சம்பந்தப்பட்ட நிறுவனத்-திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், டிரைவர்களின் கல்வி தகுதி, லைசென்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்து, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணி வழங்-கவும், அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், பணியாளர் மற்றும் டிரைவர்களிடம் பெற்ற புதிய விண்ணப்பங்களை, 5 நாட்களுக்குள் மாநகராட்சியில் ஒப்ப-டைக்க வேண்டும். மேற்படி நிறுவனத்தின் உத்தரவின்படி செயல்-படாத துாய்மை பணியாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது சம்பந்-தப்பட்ட நிறுவனம் மூலம் உரிய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
துாய்மை பணியாளர்கள் மற்றும் டிரைவர்களின் பணியை, 15 நாட்களுக்குள் நெறிமுறைப்படுத்த தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். 15 நாட்களுக்குள், மாநகராட்சி துாய்மை பணிகளை முறைப்படுத்தி, துாய்மை பணியை சிறப்பாக மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவிக்காத வகையில் துாய்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்-வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்