பிரதமர் மோடியும், டிரம்ப்பும் தேசியவாதிகள்; அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி: பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தேசியவாதிகள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தலைவர்களின் உறவு குறித்து அவர் பேசியதாவது: பிரதமர் மோடி வலுவான தேசியவாதி. தற்போது, டிரம்ப் அமெரிக்க தேசியவாதியாவார். தேசியவாதிகளால் மட்டுமே இதுபோன்று ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை கொடுக்க முடியும்.
டிரம்ப்பின் இந்த 2வது ஆட்சி காலத்தில், அமெரிக்காவுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்ட உலக தலைவர்களில் முதன்மையானவர் பிரதமர் மோடி. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டிரம்ப் - பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தை பாசிட்டிவாக இருந்தது.
டிரம்ப் கொஞ்சம் அசாதாரணமானவர். உலகில் பல தலைவர்களுடன் டிரம்ப்புக்கு இருக்கும் உறவுகளை ஒப்பிடும்போது, பிரதமர் மோடியுடனான உறவு சற்று வேறுமாதிரியானது, இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (1)
Matt P - nashville,tn,இந்தியா
22 பிப்,2025 - 23:46 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement