கலைத்திருவிழாவில் மாணவர்களுக்கு 'கப்'

கோவை: சின்னவேடம்பட்டி, டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான, மாபெரும் கலைத் திருவிழா நடந்தது. தாளாளர் டாக்டர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக, பாடகி மானசி பங்கேற்று, பல்வேறு பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். முன்னாள் மாணவர் வழக்கறிஞர் முரளிதரன், தன்னம்பிக்கை உரையாற்றினார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளிலிருந்து, 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பலவிதமான போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமங்களின் செயலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், சி.இ.ஓ., டேனியல், கல்வி ஆலோசகர் ஞானசேகரன், புல முதன்மையர் பழனிச்சாமி, முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

Advertisement