பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை

வாஷிங்டன்: பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளார். இந்த அமைப்பு வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த 4,000 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியுதவிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தாமாக முன்வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாதம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சமூக வலைதளத்தில், அரசு ஊழியர்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். அந்த பதிவில் டிரம்ப், 'பணியாளர்களைக் குறைக்கும் முயற்சிகளில் டி.ஓ.ஜி.இ., இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்' என கூறியிருந்தார்.
மஸ்க் அதிரடி
அதிபர் டிரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் கெடு விதித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'அடுத்த 48 மணி நேரத்திற்குள் கடந்த வாரத்தில் என்ன வேலைகளை செய்தீர்கள் என்று அரசு ஊழியர்கள் மெயிலில் விளக்கம் அளிக்க வேண்டும். பதில் அளிக்காத பட்சத்தில் அவர்கள் ராஜினாமா செய்ததாக கருதப்படுவர்' என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.





மேலும்
-
தமிழ்நாடு எங்கள் பெயர் அல்ல... எங்களின் அடையாளம்; ஸ்டாலின் காட்டம்
-
டில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்
-
விமானத்தில் பாம்புகள், பல்லிகள் கடத்தல்; பயணியை தட்டி தூக்கிய சுங்கத்துறை!
-
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி ‛பவுலிங்'
-
ரயில் நிலையங்களில் அத்துமீறல்; தி.மு.க.,வினர் மீது வழக்கு
-
அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை என்ன? நாளை கேட்கிறது அமைச்சர்கள் குழு