உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா; லோக்சபா விவாதத்தில் கனிமொழி வருத்தம்!

63

புதுடில்லி: ''உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா பழி சுமத்துகிறார்,'' என லோக்சபா விவாதத்தின் போது தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசுகையில் தெரிவித்தார்.

லோக்சபாவில் ஆப்பரேஷன் சிந்தூர் விவாதத்தின் போதுல திமுக எம்பி கனிமொழி பேசியதாவது: தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை பிறகு, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடந்தது.

உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது அமித்ஷா பழி சுமத்துகிறார்.


ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தமிழர்களின் பெருமையை பா.ஜ.,வினர் கண்டுபிடிக்கிறார்கள். பயங்கரவாத தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா? பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை; அவர்களின் வம்சமே பாதிக்கப்படுகிறது. முந்தைய பயங்கரவாத தாக்குதலில் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தடுக்க எப்படி தவறினீர்கள்?

ஜனநாயகம்



நீங்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு கவலை இல்லை. மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்யும் வரை நாங்கள் பார்லியில் இருப்போம். தேர்தல் வெற்றி என்பது தேர்தல் கமிஷனின் உதவியுடனோ சிறப்பு தீவிர திருத்தம் மூலமாகவோ இருக்கக் கூடாது. ஜனநாயகம் மூலம் இருக்க வேண்டும்.

இந்திய வரலாறு



தமிழகத்தில் இருந்து தான் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று ஸ்டாலின் பேசுவதை ஏற்க மறுக்கிறீர்கள். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி பேட்டி அளித்த விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தையே மோசமாக விமர்சித்தனர்.

துணை நிற்போம்



விக்ரம் மிஸ்ரியின் குடும்பத்தையே மோசமாக விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்போம் என்று உறுதி அளித்தோம். இந்தியாவின் இறையாண்மையை நம்புகிறேன்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.

Advertisement