தங்க மயில் ஜூவல்லரி புதிய கிளை சென்னை தி.நகரில் திறப்பு

புதுச்சேரி : தங்க மயில் ஜூவல்லரியின் 60வது புதிய கிளை திறப்பு விழா, சென்னை தி.நகரில் நடந்தது.

நிர்வாக ஆடிட்டர் ராஜகோபாலன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.விழாவில், நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்த தாஸ், இணை நிர்வாக இயக்குநர்கள் ரமேஷ், குமார் வரவேற்றனர்.

தங்கமயில் நிர்வாக நிதி அதிகாரி ராஜேஷ் கண்ணா, பொது மேலாளர்கள் அருண், கோகுல், கிஷோர் லால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தங்கமயில் ஜூவல்லரியின் நிர்வாகிகள் கூறுகையில், 'மதுரையை தலைமையிடமாக கொண்ட தங்கமயில் நிறுவனம், 33 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளது.

30 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுதும் 59 கிளைகள் உள்ள நிலையில், தற்போது 60வது புதிய கிளையை சென்னை தி.நகரில் துவங்கியுள்ளது.

தங்கமயில் ஜுவல்லரி ஷோரூமிற்குள்ளேயே, பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை உருவாக்கி, 'தங்க மாங்கல்யம்' எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்துகிறது. மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், ரத்தின கற்களில் அமைந்த நகைகள், வெள்ளி நகைகள் என அனைத்து விதமான திருமண நகைகளின் கலெக் ஷன்களை சிறந்த விலைக்கு ஒரே இடத்தில் வாங்கிடலாம்.

குறுகிய கால வளர்ச்சியாக இல்லாமல்,வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட காலம் பயணிக்க வேண்டும் என சரியான திட்டமிடுதல், வழிகாட்டுதல்கள், சேவைக்கான தேவைகள் அனைத்தையும் உருவாக்கி அதன்படி நடந்து வருகிறோம்.

சென்னை தி.நகர் கிளை திறப்பு விழா சலுகையாக சிறப்பு ஆபர் வழங்கப்படுகிறது.

இச்சலுகை வரும் மார்ச் 2ம் தேதி வரை மட்டுமே. விவரங்களுக்கு 1800 889 7080 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளவும்' என்றனர்.

Advertisement