இன்றைய நிகழ்ச்சிகள்/// பிப். 24 க்குரியது

கோயில்

மாசி மண்டல உற்சவம் - சுப்பிரமணியர் தேர் 2ம் பிரகாரம் புறப்பாடு: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. அகண்டநாமம், அன்னதானம்: நாமத்வார் இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 6:00 மணி, சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், மதியம் 12:00 மணி.திருநாவுக்கரசர் தேவாரம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, திருவள்ளுவர் மன்றம், 9, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.ஏகாதசி - ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

தேசிய அறிவியல் தினம்: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியம், பங்கேற்பு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, அகில இந்திய மக்கள் இயக்க தலைவர் ராஜமாணிக்கம், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் தினகரன், மாவட்டத் தலைவர் ராஜேஷ், ஏற்பாடு: யுரேகா இயற்பியல் மன்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், காலை 10:30 மணி.காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு தொடக்க விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்கள்: காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், மதியம் 2:30 மணி.

பொது

மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரி 1975 ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு: ராயல் கோர்ட், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் சங்கரமூர்த்தி, ராமசுப்பிரமணியன், பழனிக்குமார், காலை 10:00 மணி.

Advertisement