தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 'தமிழகத்தில் நாளை முதல் மிதமான மழை பெய்யும், இயல்பை விட, வெப்பநிலை குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை, வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. இந்தச் சூழல் மெல்ல மாறி வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், இன்று பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். காலை வேளையில் பனி மூட்டம் நிலவும். தமிழகம், புதுச்சேரி காரைக்காலில், நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால், தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மோகன்லால், மாதவன், மனு பாகர்...; பிரதமர் மோடி தேர்வு செய்த 10 பேர்!
-
வாரத்தின் துவக்க நாளிலேயே விலை உயர்வை கண்டது தங்கம்; ஒரு சவரன் ரூ.64,440!
-
தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் செங்கை புத்தக திருவிழா
-
பீஹாரில் லாரி - வேன் மோதியதில் 7 பேர் பலி; ம.பியில்., 6 பேர் உயிரிழந்த பரிதாபம்
-
நான் பணக்காரன் வீட்டுப் பிள்ளை அல்ல; தாயின் வறுமை நினைவுகளை பகிர்ந்து துரைமுருகன் உருக்கம்
-
ஜெர்மனியில் ஆட்சியைப் பிடிக்கிறது எதிர்க்கட்சி; தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் அதிபர் ஒலாப்