ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை

1

தஞ்சாவூர்: ஆட்டோ வாடகை கொடுக்காமல், போதையில் தகராறு செய்த பூக்கடை ஊழியரை, இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, தங்கவேல் நகரை சேர்ந்தவர் அன்பரசன், 26; பூக்கடை தொழிலாளி. இவர், அரவிந்த், 38, என்பவரின் ஆட்டோவை, பூக்கள் ஏற்றி செல்ல பயன்படுத்தி வந்தார்.


சில நாட்களாக ஆட்டோவிற்கான வாடகையை அன்பரசன் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை, அன்பரசன் மீண்டும் அரவிந்திடம் தகராறு செய்து சென்றார்.

இரவு, 9:30 மணிக்கு குடி போதையில் இருந்த அவர், மார்கெட் பகுதியில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்த அரவிந்தை அடிக்க முயன்றுள்ளார்.

ஆத்திரமடைந்த அவர் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியால், அன்பரசன் தலையில் தாக்கினார். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார். போலீசார் அரவிந்தனை கைது செய்தனர்.

Advertisement