விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்குடி காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அழகப்பா அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் குழுமம் மற்றும் தாவரவியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தாவரவியல் துறை தலைவர் கோமளவல்லி தலைமை வகித்தார்.

விருதுநகர் காலநிலை மீள்தன்மை கொண்டு நிறுவன திட்ட அலுவலர் ராஜலட்சுமி சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பேசினார். மாநில சுற்றுச்சூழல் செயல்பாட்டு ஆலோசகர் அவினாஷ் திரவியம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பது குறித்து பேசினார். பேராசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Advertisement