கிராமப்புற வள நிபுணர்களுக்கு பயிற்சி

வில்லியனுார் : மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கிராமப்புற வள நிபுணர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

வில்லியனுார் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு உட்பட்ட 42 பஞ்சாயத்துகளில் உள்ள கூட்டமைப்பின், சமூக வல்லுநர்கள் மற்றும் கணக்காளர்கள் 84 பேரை உள்ளூர் வள வல்லுனர்களாக நியமித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த துவக்க விழாவிற்கு, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் அருள்ராஜன் தலைமை தாங்கி, பயிற்சியை துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சித் துறை திட்ட அதிகாரி தயானந்த டெண்டுல்கர் வரவேற்றார். கேரளா மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் குடும்பஸ்ரீ பயிற்சியளித்தார்.

நிகழ்ச்சியில் வட்டார இணைப்பு அதிகாரி, கிராம சேவக், வட்டார மேலாளர்கள், வட்டார மகளிர் கூட்டமைப்பு பணியாளர்கள் கலந்துகொண்டனர். இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி நன்றி கூறினார்.

Advertisement