இ.கம்யூ., பேரவை கூட்டம்

பவானி: பவானி ஒன்றிய இ.கம்யூ., கட்சி, நுாற்றாண்டு விழா பேரவை கூட்டம், காடையம்பட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பவானி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள எலும்பு முறிவு மருத்துவரை நியமிக்க வேண்டும். பதவிக்காலம் முடிந்த பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Advertisement