தாழ்வான மின் வயர்களால் விவசாயிகள் கவலை--

ராஜபாளையம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய விவசாய தோப்புகளில் தாழ்வாக தொங்கும் நிலையில் உள்ள மின் வயர்களால் யானை உள்ளிட்ட வன விலங்குகளால் அபாயம் ஏற்பட்டு விவசாயிகள் பிரச்னைகளுக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மின்வாரியத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இப்ப பகுதிகளில் அடிக்கடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவுக்காக முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

பலரது விவசாய தோப்புகளிலும் மின் வயர்கள் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. மின் வயர்களை உயர்த்தி அமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் பணிகளில் வேகம் இல்லை. குடியிருப்பு பகுதிகளில் பிரச்னை எனில் உடனடியாக மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கும் சூழலில் வனப்பகுதி ஒட்டிய தோப்புகளில் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தாலும் மிகுந்த தாமதத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் யானைகள் தொந்தரவு இருக்கும் நேரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு போன்ற சூழலில் தாழ்ந்து செல்லும் மின் வயர்களால் யானைகள் மீது உரசி பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மின்வாரியத்தினர் மின் வயர்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement