விஜய் கட்சி ஆண்டு விழா: கியூ.ஆர்., குறியீடுடன் அனுமதி
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்கும் கட்சியினருக்கு, கியூ.ஆர்., ரகசிய குறியீடுடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, மாமல்லபுரத்தில் உள்ள பாயின்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில், 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்போருக்கு, அ.தி.மு.க.,வை மிஞ்சும் வகையில், உணவு உபசரிப்பு வழங்க, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உட்பட 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
எனவே, அதைத் தாண்டிய கூட்டம் சேராமல் தடுப்பதற்கு, கியூ.ஆர்., ரகசிய குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை, அனுமதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, மாவட்ட செயலர்களை வரவழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.
விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பை ஏற்றுக்கொண்டு, முதல் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க உள்ளார்.
மேலும்
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?