பீஹாரில் லாரி - வேன் மோதியதில் 7 பேர் பலி; ம.பியில்., 6 பேர் உயிரிழந்த பரிதாபம்

பாட்னா: பீஹார் மாநிலம் பாட்னாவில் லாரியும், வேனும் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். அதேபோல், மத்திய பிரதேசம் மாநிலத்தில் பஸ் மீது ஜீப் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் வேகமாக வந்த ஜீப் பஸ் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள நூரா பாலத்தில் நேற்றிரவு லாரியும், வேனும் மோதி விபத்துக்குள்ளானது. அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும்
-
மஹா சிவராத்திரிக்கு 440 சிறப்பு பேருந்துகள்
-
தி.மு.க., ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை; இ.பி.எஸ்.,
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
-
நகல் என்றுமே அசல் ஆக முடியாது; முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை கிண்டல்
-
கல்வி, மருத்துவம் தான் அரசின் இரு கண்கள்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தோட்டத்தில் புகுந்த 13 அடி நீள ராட்சத முதலை!