கல்வி, மருத்துவம் தான் அரசின் இரு கண்கள்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

55


சென்னை: கல்வி, மருத்துவம் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். அனைவருக்கும் தரமான மருந்து கிடைப்பதே அரசு உறுதி செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. சென்னையில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கல்வி, மருத்துவம் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். அனைவருக்கும் தரமான மருந்து கிடைப்பதே அரசு உறுதி செய்துள்ளது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

திராவிட மாடல் அரசு சாதாரண மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும். மருந்தகம் அமைக்க தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவை குறைக்கவே முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.



முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் பணியை சிறப்பாக செய்த அமைச்சர்கள், அதிகாரிகளை பாராட்டுகிறேன். மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறோம். எல்லா துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நிதி நெருக்கடி இருந்தாலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement