டில்லி விமான நிலையத்தில் ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது

புதுடில்லி: டில்லி விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.11.28 கோடி மதிப்பிலான கஞ்சா பாக்கெட்டுக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த பிப்.,21ம் தேதி பாங்காக்கில் இருந்து டில்லி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் பையை சோதனையிட்டனர். அதில்,, பிஸ்கட், சாக்லெட்டுக்கள் மற்றும் அரிசி பாக்கெட் போன்ற கவர்களில் பச்சை நிறத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர், அதனை பிரித்து பரிசோதனை செய்ததில், அது கஞ்சா என தெரிய வந்தது. சுமார் 11,284 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.11.28 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த பயணியை கைது செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
Kumar - ,
24 பிப்,2025 - 12:53 Report Abuse

0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
24 பிப்,2025 - 13:34Report Abuse

0
0
Reply
மேலும்
-
நன்றி வணக்கம், நாம் தமிழர்: விலகினார் காளியம்மாள்!
-
வங்கதேச விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல்!
-
மூளை இல்லாதவர்கள்... பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை திட்டி தீர்த்த அக்தர்
-
மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
மாமல்லபுரத்தில் பிப்.,26ல் த.வெ.க., 2ம் ஆண்டு விழா; 18 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
-
பத்ம ஸ்ரீ புரிசை கண்ணப்ப சம்பந்தன்
Advertisement
Advertisement