முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

22

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதற்கிடையே, பிறந்தநாளையொட்டி அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை , முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பிரதமர் வாழ்த்து



இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


கவர்னர் ரவி வாழ்த்து



தமிழில் கையெழுத்து போட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக கவர்னர் ரவி எழுதி உள்ள கடிதத்தில், ' தாங்கள் இன்று தங்களுடைய 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழக மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழக மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.



அண்ணாமலை வாழ்த்து



தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


காங்., எம்.பி., ராகுல் வாழ்த்து

என் சகோதரரும், தமிழகத்தின் முதல்வருமான ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து; இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, அரசியலமைப்பைக் காக்க தொடர்ந்து இணைந்து நிற்போம்.

த.வெ.க., தலைவர் விஜய்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் இன்று 72ம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.


முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement